வித்தியா படுகொலை தொடர்பில் மேலும் இருவர் கைது!

0
234
viththiyaபுங்குடுதீவு  மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக மேலும் இருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை கடந்த இரு தினங்களிற்கு முன்னர் புங்குடுதீவு பகுதியில் மறைந்திருந்த நிலையில் கொழும்பில் இருந்து வந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
இக்கைது நடவடிக்கை  குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஒன்பது  பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இறுதியாக தங்களால்  10 ஆவது சந்தேக நபரான  பியவர்த்தன ராஜ்குமார் என்பவரே கைது செய்யப்பட்டார்.
எனினும் இவரது கைதுக்குப் பின்னர் தாங்கள் எவரையும் இது வரை கைது செய்யவில்லை என குறிப்பிட்டனர்.
எனினும் தற்போது புதிதாக  கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் கொழும்பிற்கு அழைத்து சென்று குற்றப்புலனாய்வு பிரிவினர் கடுமையாக விசாரணை செய்துவருவதாக அறியமுடிகிறது.
மேற்படி கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015 ஆண்டு மே மாதம் அளவில் புங்குடுதீவு பகுதியில் வைத்து பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இப்படுகொலையை கண்டித்து நாடுபூராகவும் ஹர்த்தால், போராட் டங்கள்  இடம்பெற்றன.
இதன் பின்னர் 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில்  நீதவான்  எஸ்.லெனின் குமார் முன்னிலையில் சுமார் 8 மாதங்களாக வழக்குகள் நடை பெற்று வந்தன.
இதன் போது பொலிஸார், குற் றப்புலனாய்வு பிரிவினரால்  கொலை  தொடர்பான பல சான்றுப் பொருட் கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அவை பகுப்பாய்விற்காக குற்றப்புலனாய்வினர் ஊடாக குறித்த இடங்களுக்கு அனுப்பப்பட்டன.
இருந்த போதிலும் காலம் கடந்துள்ள நிலையில் சான்றுப் பொருட்களுக்கான அறிக்கைகளின் இறுதி முடிவு இதுவரை மன்றிற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
தொடர்ந்தும் வழக்கு மன்றிற்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் புதிய நீதவான் எம்.எல்.றியால் விசாரணையை மேற்கொண்டதுடன் குற்றப்புலனாய்வு பிரிவினரை கடும்தொனியில் எச்சரிக்கை செய்தார்.
மன்றில் ஆரம்பம் முதல் இது வரை கோரப்பட்ட ஒன்பது  அறிக்கை முடிவுகளும் இதுவரை கிடைக்க வில்லை.
எனவே இனியும் தாமதிக்காது அடுத்த அமர்வில் இவற்றை சமர்ப்பிக்குமாறு இதன்போது நீதவான் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here