150 பேர் நேற்று சாட்சியமளிப்பு!

0
95

9177
வேலணை பிரதேச சபையில் நேற்றைய தினம் நடைபெற்ற காணாமல் போனோரினை கண்டறியும் ஆணைக்குழுவில் 150 பேர் சாட்சியமளித்துள்ளனர். மொத்தம் 193 பேர் சாட்சியமளிக்க வந்திருந்த போதிலும் 150 பேரே சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவற்றில் நேற்றைய தினம் புதிதாக 70 பெரும் பதிவு செய்திருந்தனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட விசாரணை அமர்வுகள் தற்போது யாழ்.மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் இரண்டாம் நாள் அமர்வு நேற்றைய தினம் வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதற்கமைய கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமாகிய ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட விசாரணைகள், 28,29ம் மற்றும் மார்ச் மாதம் 1ஆம் ஆகிய திகதகளில்,

காலை 8.30. மணிமுதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் மார்கழி மாதம் இவ் அமர்வுகளின் இரண்டாம் கட்ட விசாரணைகள் யாழில் இடம்பெற்றிருந்த நிலையில், யாழ் மாவட்டத்தில் இடம்பெறாத பிரதேச செயலக பிரிவுகளில் இவ் அமர்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here