காணாமல் போனோர் தொடர்பான இரண்டாம் கட்ட விசாரணைகள் யாழில்!

0
186

1456547996_missing1
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று மீண்டும் யாழ்ப்பாணத்தில் விசாரணை அமர்வுகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பரணகம ஆணைக்குழு 2ஆம் கட்ட விசாரணை அமர்வுகளை நடத்தியிருந்த நிலையில் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு அமர்வுகள் நடத்தப்படவில்லை.
1456548016_missing2
இந்த நிலையில் நடத்தப்படாத பிரதேச செயலக பிரிவுகளுக்கான விசாரணை அமர்வுகள் இன்றிலிருந்து எதிர்வரும் மாதம் முதலாம் திகதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் கோப்பாய், பருத்தித்துறை, கரவெட்டி ஆகிய பிரதேச செயலகங்களுக்காக கோப்பாய் பிரதேச செயலகத்திலும் நாளை வேலணை, ஊர்காவற்றுறை காரைநகர், நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலகங்களுக்காக வேலணை பிரதேச செயலகத்திலும் நாளை மறுதினம் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மருதங்கேணி, சாவகச்சேரி பிரதேச செயலகங்களுக்காக சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.missing4
இம்முறை இடம்பெறவுள்ள அமர்வுகளில் மொத்தமாக 772 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதுடன் இந்த அமர்வுகள் குறித்த தினங்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 5.30வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here