ஆஃப்கானிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட, குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் காபுலில் பாதுகாப்பு அமைச்சுக்கு வெளியே இடம்பெற்ற ஒரு தாக்குதலில், குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, நகரின் பாதுகாப்புத் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ள தாலிபான், கட்டடத்திற்கு வெளியே வரும் படையினரையும் அதிகாரிகளையும் இலக்கு வைத்ததாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, கிழக்கு மாகாணமான குனாரில் இடம்பெற்ற தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், அனேகமானோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதில், கொல்லப்பட்டோரில் அனேகமானோர் பொதுமக்களாவர்.
தீவிரவாதிகள், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரிகள் என்பதையே தாக்குதல்கள் காண்பிப்பதாக, ஆஃப்கான் தலைமை செயல் அதிகாரி அப்துல்லா அப்துல்லா தெரிவித்தார்.