ஊர்காவற்றுறை நாரந்தனை மத்திய பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு கிணற்றுக்குள் தவறிவீழ்ந்த மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நாரந்தனை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் அன்ரன் யோகராசா அருள்நிதி (வயது 17) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். நேற்று முன்னதினமிரவு முகம் கழுவுவதற்காகக் கிணற்றடிக்குச் சென்ற மாணவி, கிணற்றடியில் படந்திருந்த பாசி சறுக்கியதால் கணிற்றுக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மாணவியின் சடலம், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கை யளிக்கப்படுவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.