நேபாளத்தில் மீண்டும் மற்றொரு சிறிய ரக விமானம் இன்று விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தின் மேற்குப்பகுதியில் 11 பேருடன் பயணித்துக்கொண்டு இருந்த குறித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மலைப்பகுதி அருகே இருந்த விவசாய நிலத்தில் அவசரமாக தரையிறங்க முயற்சித்தபோது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு உலங்கு வானூர்தி மூலமாக ராணுவ வீரர்களும் மீட்புக்குழுவினரும் விரைந்தனர்.
இந்த விபத்தில் விமானத்தின் விமானிகள் இருவருமே பலியானதாகவும் பயணிகள் 9 பேரும் காயமடைந்துள்ளனர்.
இதில் விமானி தினேஷ் நியூபானே, துணை விமானி சந்தோஷ் ரானா ஆகியோர் உயிரிழந்ததாக மாவட்ட பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்னர் 23 பேருடன் சென்ற நேபாள விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.