தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு மார்ச் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் மூன்று கடற்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில சந்தேகநபர்கள் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.