தொடர் உணவுத்தவிர்ப்பில் தமிழ் அரசியல் கைதிகள்; உடல் சோர்விலும் விடுதலைக்காக போராட்டம்!

0
231
aaaa-prisonஅநுராதபுரம் மற்றும் புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் நேற்றையதினம் 3ஆவது நாளாகவும் தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந் துள்ளனர்.
  அநுராதபுரம் சிறைச் சாலையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். கரவெட்டி வடக்கு, கரணவாயைச் சேர்ந்த மதியரசன் சுலக்சன், நாவலப்பிட்டி, மக்கும்பரவைச் சேர்ந்த கணேசன் சந்திரன் மற்றும் புதிய மகசின் சிறைச்சாலையில் ஜே பிரிவில் உள்ள 13 ஆண் தமிழ் அரசியல் கைதிகளும், பெண்கள் பிரிவில் உள்ள ஒருபெண் தமிழ் அரசியல் கைதியுமாக பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா.நீதிநாதன், க.வேத நாயகம், ந.தர்மராஜா, சு.ஞான சீலன், தயாபரன், தி.மனோகரன், யோசப் செபஸ்ரியான், சுப்பிர மணியன் கபிலன், இராசதுரை திருவருள், இரவீந்திரன் மதனி ஆகியோரே உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இவர்கள் தமது விடுதலை குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரையில் தாம் உண்ணாவிரதப் போராட் டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும், நீண்ட காலமாக விசாரணைகளின்றி சிறைச் சாலைகளில் தங்கியிருந்து சொல்லெண்ணா துன்பங்களை அனுபவித்து வரும் நாம் விடுதலையை வலியுறுத்தி உயிரைத் துச்சமெனமதித்தே இப்போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களது உடல்நிலை சோர்வடைந்தநிலையிலும் மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்ளாமல் தமது போராட்டத்தை தொடர்ந் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here