பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் மீது 17. 02. 2016 இரவு சிங்களக் கைக்கூலிகள் மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் , கேணல் பரிதி ஆகியோரின் படுகொலைகளுக்கு நீதி வேண்டியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பிரெஞ்சு காவல்துறையினரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்று நேற்று புதன்கிழமை
பாரிஸ் லாச்சப்பல்(La_Chapell) பகுதியில் இடம்பெற்றது.
கடும் குளிருக்கு மத்தியிலும் பலரும் கலந்துகொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.