வவுனியா சிறுமி துஷ்பிரயோகத்தை கண்டித்தும் குற்றவாளிகளிற்கு தண்டனை வழங்க கோரியும் வடபகுதி எங்கும் இன்று பூரண கர்த்தால் அனுஷ்டிப்பு இடம்பெறுகிறது.
நேற்று 23.02.2016 செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தைத்தொடர்ந்து புதன்கிழமை பூரண கர்த்தால் மற்றும் கடையடைப்பும் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறுகோரியும் வவுனியா மாவட்டசெயலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு சிவில் சமூகத்தினர் கேட்டுள்ளனர்.