வவுனியாவில் அதிகளவில் மக்கள் கலந்து கொண்டு ஹரிஸ்ணவியின் கொலையாளிக்கு தண்டனை வழங்க கோரிம் இவ்வாறான சம்பவங்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு A9 சாலையினை மறித்து வவுனியா கச்சேரியின் முன்னால் பொது கூட்டம் ஒன்றை நடத்தி பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் மக்களால் கையெழுத்து இடப்பட்டு வழங்கப்பட்டது.
இதன்பின்னரும் மக்கள் நீதி கிடைக்கும் வரை இவ்விடம் விட்டு நகரமாட்டோம் என கோசம்கள் எழுப்பி நின்றுவிட்டனர். பின்னர் பல முயற்சிகளின் பின்னர் பல உறிதிமொழிகள் வழங்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.
நாளைய தினம்(24-02-2016) பூரண கர்த்தால் மேற்கொள்ளவுள்ளதால் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கப்படுகின்றது.