பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற வன்னி மயில் நடனப் போட்டி – 2016

0
622

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழ் பெண்கள் அமைப்பு  7 ஆவது தடவையாக நடாத்திய வன்னி மயில் நடனப்போட்டி நிகழ்வுகள் கடந்த 20.02.2016 சனிக்கிழமை மற்றும் 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் SARCELLES  பகுதியில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.IF

vanni majil 1 - Copyvanni majil 2 இருதினங்களும் காலை 08.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகின. பொதுச்சுடரினை சனிக்கிழமை மாவீரர் கேணல் பருதி அவர்களின் தாயாரும் ஞாயிற்றுக்கிழமை சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர்.vanni majil 3 - Copyvanni majil 4 - Copy
போட்டியின் நடுவர்களாக ஞானசுந்தரி வாசன் ( நாட்டிய கலைமணி – யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பீடம், ராதா நடனாலய அதிபர் – சுவிற்சர்லாந்து), அமலா அன்ரனி சுரேஸ்குமார் ( ‘நாட்டியக் கலைமணி” – யாழ் பல்கலைக் கழகம், ‘பரத சூடாமணி” நிருத்திய நாட்டியாலய அதிபர் – ஜேர்மனி), நிஷாந்தி சண்முகதாசன் (பரத கலாவித்தகர் – வட இலங்கை சங்கீத சபை, நுண்கலைமாணி (பரதம்) – இராமநாதன் நுண்கலைப் பீடம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு குழு, பாலர் பிரிவு, மத்திய பிரிவு குழு, கீழ்ப்பிரிவு, கீழ்ப்பிரிவு குழு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில், எதிர்வரும் 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு AULNAY SOUS BOIS பகுதியில் அதி மேற்பிரிவு, அதிஅதிமேற்பிரிவு, சிறப்புப்பிரிவு மேற்பிரிவு குழு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

IF

IF
IF

IF

IF

IF
IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

vanni majil 6 - Copy vanni majil 5 - Copy IF

IF

நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற போட்டியாளர்களின் விபரம்:
மத்திய பிரிவு
அ) 1 ஆம் இடம் – வினாசித்தம்பி இளையாள்
2 ஆம் இடம் – றஞ்சன் யான் பிருந்தா
3 ஆம் இடம் – மைக்கேல் சுவித்தா

ஆ) 1 ஆம் இடம் – ஜெகநாதன் சில்வியா
2 ஆம் இடம் – மகேஸ்வரன் புளோரா\  துஷந்தன் தீபிகா
3 ஆம் இடம் – சுரேஸ் சோந்ரின்

இ) 1 ஆம் இடம் – தயாபரன் சௌமியா
2 ஆம் இடம் – மகேந்திரராஜா பார்கவி
3 ஆம் இடம் – வடிவேலு ஆருதி

ஈ) 1 ஆம் இடம் – பத்மராஜா கோபிகா
2 ஆம் இடம் – குகராஜா சாரு
3 ஆம் இடம் – கஜேந்திரா அதிஷாஃ சிறீதரன் அபிஷா

மேற்பிரிவு
அ) 1 ஆம் இடம் – வஜீந்திரன் சௌமியா
2 ஆம் இடம் – புஸ்பகரன் அட்ஷயா
3 ஆம் இடம் – சுரேஸ் ஸ்டனிசியா

ஆ) 1 ஆம் இடம் – ராஜ்குமார் ரம்யா
2 ஆம் இடம் – சிறிநாதன் ஆர்த்தி
3 ஆம் இடம் – ஜேரோம் பெலாஷி

இ) 1 ஆம் இடம் – ராஜசுப்பிரமணியம் அபிஷா
2 ஆம் இடம் – ஜெயந்தன் ஆஷிகா
3 ஆம் இடம் – கோவிந்தராஜ் சௌந்தர்யா

ஈ) 1 ஆம் இடம் – வசந்தகுமார் லேனா
2 ஆம் இடம் – சந்திரசேகரன் அபிலானா
3 ஆம் இடம் – பத்மராஜா லோஜிகா

குழு அதிமேற்பிரிவு
1 ஆம் இடம் – இல.5 – ‘கடலே கடலே….” (செவ்ரோன் தமிழ்சோலை)
2 ஆம் இடம் – இல.1 – ‘வீழமாட்டோம்….” (ஓர்னேசுபுவா தமிழ்ச்சோலை)
3 ஆம் இடம் – இல.3 – ‘பாதச் சலங்கை….” (திரான்சி தமிழ்சோலை)

பாலர்பிரிவு
1 ஆம் இடம் – மணிவேந்தன் தூயா
2 ஆம் இடம் – லோஜன் சாதனா
3 ஆம் இடம் – பார்த்தீபன் ஷரினி \  விவேகானந்த சிவம் அபிஷா

கீழ்ப்பிரிவு
அ) 1 ஆம் இடம் – பொன்னுச்சாமி விக்ரம் யூலியன்
2 ஆம் இடம் – யாதவராசன் டொறின்
3 ஆம் இடம் – கிருஷ்ணகுமார் பிலோனா

ஆ) 1 ஆம் இடம் – ஆதவன் இலக்கியா
2 ஆம் இடம் – யூனேஸ் ஷேர்லின்
3 ஆம் இடம் – ஸ்ரீரங்கன் ஹரினி

குழு கீழ்ப்பிரிவு
1 ஆம் இடம் – இல.2 – ‘சின்ன சின்ன பூக்கள்….”
2 ஆம் இடம் – இல.1 – ‘செண்பகமே செண்பகமே….”

ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here