பாகிஸ்தானின் வடமேற்கு பகு தியில் தீவிரவாதிகள் பதுங்குமிட ங்களை குறிவைத்து அந்நாட்டு இராணுவம் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசியதில் 31 தீவிர வாதிகள் கொல்லப்பட்ட அதே வேளை பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் கைபர் பழங்குடி மாவட்டத்தில் தீவிரவாதிகளின் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டது என்று இராணுவத் தரப்பில் தெரி விக்கப்பட்டது.
தீவிரவாதிகளின் 4 பதுங்குமிடம், தீவிரவாதிகளுக்கு தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சி அளிக்கப்படும் முகாம் ஆகியவை அழிக்கப்பட்டது.
திர்ராக், கைபர் பகுதியில் இராணுவம் போர்விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் தற்கொலை தீவிரவாதிகள் உட்பட 31 தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கான் எல்லையில் அமைந் துள்ள கைபர் பழங்குடி பகுதி தீவிர வாதிகளின் புகலிடமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ் தானில் தாக்குதல் நடத்தும் தீவிரவா திகள் இப்பகுதியிலே உள்ளனர்.
அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாத இயக்கங்கள் இங்கே மிகவும் வலிமையாக நிலை கொண் டுள்ளது.
கடந்த டிசெம்பர் மாதம் 16 ஆம் திகதி தலிபான் தீவிரவாதிகள் பெஷாவர் நகரில் இராணுவப் பாடசாலையில் மிக கொடூரத் தாக்கு தலை நடத்தினர்.
6 தற்கொலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 133மாணவர்கள் உட்பட 150 பேர் பலியாகினர். இதனையடுத்து இரா ணுவம் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தீவிரமாக இறங்கி யுள்ளது.
பாகிஸ்தானில் மரண தண்ட னைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, பெஷாவர் தாக்குதலை அடுத்து நீக்கப்பட்டது.
இதனையடுத்து மரண தண் டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிக ளுக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டு வருகிறது.
7 தீவிரவாதிகள் இதுவரையில் தூக்கிலிடப்பட்டுள் ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கராச்சி விமான நிலையத்தில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியதையடுத்து தீவிரவாதிக ளுக்கு எதிராக இராணுவம் நடத் திய தாக்குதலில் இதுவரையில் சுமார் 1700இற்கும் அதிகமான தீவிரவா திகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.