வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் புதன்கிழமை பூரண கர்த்தால் அனுஷ்டிப்பு

0
169

Vavuniya_Cityவவுனியாவில் சிறுமி துஷ்பிரயோகத்தை கண்டித்தும் குற்றவாளிகளிற்க்கு தண்டனை வழங்க கோரியும் கர்த்தால் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான கலந்தாலோசனை கூட்டம் இன்று மாலை வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் எதிர்வரும் செவ்வாய் கிழமை 23.02.2016 அன்று ஆர்ப்பாட்டமும் தொடர்ந்து புதன்கிழமை பூரண கர்த்தாள் மற்றும் கடையடைப்பும் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறுகோரியும் வவுனியா மாவட்டசெயலகத்தில் மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்விற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா மாவட்ட சிவில் சமூகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here