பொலிஸ் வேடத்தில் வந்த கொள்ளையர்கள்: 2,00,000 யூரோ மதிப்பிலான நகைகளை அள்ளிச்சென்ற சம்பவம்!

0
210

9079பிரான்ஸ் நாட்டில் பொலிசார் வேடத்தில் முதியவர்களின் வீட்டிற்குள் நுழைந்த 4 கொள்ளையர்கள் 2,00,000 யூரோ மதிப்பிலான நகைகளை அள்ளிச்சென்ற சம்பவம் உண்மையான பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள 16 வது வட்டத்தில் அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வர குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதே பகுதியில், வயதான கோடீஸ்வரர்களும் துணையின் தனிமையில் வசித்து வருகின்றனர்.

இந்த சூழலை பயன்படுத்திக்கொண்ட 4 பேர் அடங்கிய ஒரு கொள்ளை கூட்டம், ஒரு அதிரடி திட்டத்தை வகுத்துள்ளது.

சில தில்லுமுல்லுகளை செய்து பொலிசாரின் உடுப்புகளை அணிந்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வீட்டுக்கு கடந்த புதன்கிழமை பிற்பகல் வேளையில் சென்றுள்ளனர்.

வீட்டிற்கு முன்னால் நின்றுக்கொண்டு கதவினை வேகமாக தட்டியுள்ளனர். உள்ளே இருந்த வயதான தம்பதி பதறி அடித்துக்கொண்டு வந்த கதவை திறந்துள்ளனர்.

அப்போது ‘உங்கள் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். சீக்கரம் எங்களுக்கு வழி விடுங்கள், அவர்களை உடனடியாக பிடிக்க வேண்டும்’ என போலி பொலிசார் பரபரப்பாக கூறியுள்ளனர்.

இதனை உண்மை என நம்பிய தம்பதி, ‘சீக்கரம் உள்ளே வாருங்கள்’ என கதவினை திறந்து விட்டுள்ளனர்.

உண்மையான பொலிசார் போல் அந்த கொள்ளையர்கள் ஒவ்வொரு அறையாக வலம் வந்துள்ளனர்.

பின்னர், ‘கொள்ளையர்கள் திருடுவதற்கு முன், ‘உங்கள் நகைகளை பாதுகாக்க வேண்டும். எந்த அறையில் நகைகளை வைத்துள்ளீர்கள்?’ என போலி பொலிசார் கேட்டுள்ளனர்.

இந்த நிலையிலும் உண்மையை அறியாத அந்த அப்பாவி முதியவர்கள் நகைகளை வைத்துள்ள அறையை அந்த கொள்ளையர்களுக்கு காட்டியுள்ளனர்.

விரைந்து சென்ற கொள்ளையர்கள் நகைகளை அள்ளி மூட்டை கட்டிக்கொண்டு புறப்படும்போது தான் ‘இவர்கள் தான் அந்த கொள்ளையர்கள்’ என உண்மை முதியவர்களுக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக உண்மையான பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கும் முன்னதாக, அந்த 4 கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

முதியவர்களின் வீட்டிற்கு வந்த உண்மையான பொலிசார், அங்குள்ள தடையங்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதியவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையிட்ட நகைகளின் ஒட்டுமொத்த மதிப்பு 2,00,000 யூரோ வரை இருக்கும் என தகவல் அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here