
இந்த நிலையில் காணாமல்போன மற்றைய மீனவரை தேடி கடற்படையினரும், மீனவர்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 16ஆம் திகதி இந்த இரண்டு மீனவர்களும் கடலுக்குச் சென்றதாகவும் அதன் பின்னர் அவர்கள் கரை திரும்பவில்லை என்றும் தெரிவித்து அவர்களது உறவினர்கள் துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் திருகோணமலை – அபயபுரப் பகுதியைச் சேர்ந்த ரோகன நிசாந்த முனவீர (வயது 44) என்பவரது சடலம் தற்போது மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.