ஈழ தேசத்தின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 05ம் ஆண்டு நினைவு நாள்

0
1031

maathanthai copyமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 05ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் 2010ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார்.

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் 2010ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார்.

ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவு எம்மை மிக ஆழ்ந்த சோகத்தில் இட்டுசென்றது.

யுத்தம் முடிவுற்று பல மாதங்கள் ஆகியும் கடும் நோயின் காரணமாக தவித்த போது கூட அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சிங்கள கொடூர அரசு அவரை அவ் முகாமை விட்டு செல்ல அனுமதிக்காமல் தனது கோர முகத்தை காட்டி நின்றது .

வார்த்தைக்கு வார்த்தை மனித உரிமையை உச்சரிக்கும் வல்லரசு நாடுகளும் சர்வதேச நாடுகள் அதை கண்டும் காணாமல் மௌனம் சாதித்தது .

உண்மையிலே உலக நாடுகள் சுயநலம் அற்று நேர்த்தியாக செயல்பட்டிருந்தால் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் மட்டும் அல்ல எத்தைனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருந்திருக்கலாம்.

நாம் அனைவரும் எப்பொழுதும் எமக்காக தம் உயிரை அர்ப்பணித்து தமிழீழக் கனவுடன் கல்லறைக்குள் கண்மூடி விழித்திருக்கும் எம் தேச வீரர்களையும், நாட்டுபற்றார்களையும், மக்களையும் நினைவுகூருவோம்.

ஒரு குடும்பத்துக்காக வாழ்ந்து தம் உயிரை காலத்தின் கோலத்தால் அர்பணித்த எம் பெற்றோர்களை பிள்ளைகளை நாம் உயிர்வாழும் வரைக்கும் எப்படி மறக்காமல் வருடாந்தம் நினைவு கூறுகிறோமோ அதைவிட எம் தேச விடுதலைக்காய் மக்களுக்காய் தம் உயிரை அர்ப்பணித்தவர்களை நாம் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here