யேர்மனிக்கு பயணித்த சிறீலங்கா அரசஅதிபர் தமிழினப் படுகொலையாளி மைத்திரிபால சிறீசேனாவுக்கு எதிராக இன்று (18) யேர்மனியில் பேர்லின் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆசியா பசுபிக் யேர்மன் வணிக சங்கமும் , யேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகமும் இணைந்து நடாத்திய ” சிறீலங்கா – யேர்மன் வணிக பேரவை மாநாட்டுக்கு வருகை தந்திருந்த சிறீலங்கா அரசஅதிபர் தமிழினப்படுகொலையாளி மைத்திரிபால சிறீசேனவை கண்டித்தும் , நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் தொடர்ந்தும் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை கண்டித்தும், சர்வதேச ரீதியாக சிறிலங்கா அரசு தான் செய்த/ செய்துவருகின்ற இன அழிப்பை மூடி மறைப்பதையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் காலை 11 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணிவரை நடைபெற்றது.
தமிழினப் படுகொலையை மூடி மறைத்து சிறீலங்காவுக்கு நற்பெயரை உண்டாக்கவும் இம் மாநாட்டின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வருகை தரும் தமிழினப்படுகொலையாளி மைத்திரிபால சிறீசேனவை கண்டித்து பல்லின மக்களிடம் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறவுகள் கோசங்கள் எழுப்பினர்.
மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த பல்லின வர்த்தக நிறுவனங்கள் , மக்கள் , அரச தரப்புகள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால் கவனம் பெற்றதோடு தமிழ் இளையோர் அமைப்பால் துண்டுப்பிரசுரமும் பெற்றுக்கொண்டனர் .
பலத்த பாதுகாப்புடன் மாநாட்டுக்கு வருகை தந்த மைத்திரி கண்டன ஆர்ப்பாட்டத்தை கண்டு கவனித்ததோடு , தனது கைகளை அசைத்தும் காட்டியதையிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தேசியக்கொடியை வானுயர உயர்த்தி அசைத்ததோடு இனப்படுகொலையாளி மைத்திரி என கோசம் இட்டனர் .
கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டதோடு , மாநாட்டில் கலந்துகொண்ட யேர்மனிய ஊடகங்களாலும் உள்வாங்கப்பட்டது.சிங்கள அரசஊடகங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எமது மக்களை அச்சுறுத்தல் செய்யும் வகையில் நடந்துகொண்டதையிட்டு தமிழ்செயற்பாட்டாளர்களால் விரட்டி திரத்தப்பட்டனர்.
https://www.youtube.com/watch?v=ArjsqEon9Vc&feature=youtu.be
தகவல் :
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி