பிரான்சில் சிங்களக் கைக்கூலிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இரவு ஐரோப்பிய நேரம் 11 மணியளவில் பரமலிங்கம் அவர்களின் வர்த்தநிலையத்திற்கு முன்பாக இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிங்களக் கைக்கூலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரமலிங்கள் அவர்கள் கையில் படுகாயமடைந்துள்ளார்.
வர்த்தக நிலையத்தைப் பூட்டிவிட்டு வீடு செல்வதற்காக வீதிக்கு இறங்கிய போது முகமூடி அணிந்தபடி காரில் வந்த இருவரே துப்பாக்கிக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறே கடந்த 18.05.2015 அன்று வியாழக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் தனது வர்த்தக நிறுவனத்தை மூடிவிட்டு செல்ல முற்படுகையிலேயே அங்கு காத்திருந்த கும்பல் அவர்மீது கண்மூடித்தனமான தாக்குதலைமேற்கொண்டது.
புலம்பெயர் நாடுகளில் எமது தேசிய செயற்பாடுகளை முடக்கும் முகமாக செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் ஏற்கெனவே கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகியோரை பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் படுகொலைசெய்யப்பட்டமை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் பரிதி அவர்கள் பாரிசில் படுகொலை செய்யப்பட்டமை என்பன இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக பாரிசில் இருந்து வெளியாகிய ஈழமுரசு பத்திரிகை மற்றும் அதன் இணையத்தளங்கள் யாவும் கொலைவெறியர்களின் எச்சரிக்கை காரணமாக முடக்கப்பட்டன.
அத்துடன் நிறுத்திக்கொள்ளதவர்கள், தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் தமது நடவடிக்கைகளை விஸ்தரித்திருந்தனர்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்திற்கு நேரில் வந்த ஆயுததாரிகள் பலதடவைகள் மிரட்டல் விடுத்துச்சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் இவ்வாறு மற்றொருதடவை தாக்கப்பட்டுள்ளமை புலம்பெயர்நாடுகளில் உள்ள அனைத்து தேசிய செயற்பாட்டாளர்களையும் விசனமடையவைத்துள்ளது.