மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (15) முற்பகல் ஜேர்மனிக்கு புறப்படவுள்ளார்.
சிறிசேனவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு எதிர்வரும்
17 ஆம் திகதி சான்டலர் அன்ஜலா மேர்கல் தலைமையில் ஜேர்மனியில் இடம்பெறவுள்ளது.
ஜேர்மனிக்கு வரவுள்ள தமிழினப் படுகொலையாளி மைத்திரிபால சிறீசேனாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஆசியா பசுபிக் யேர்மன் வணிக சங்கமும் , யேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகமும் இணைந்து நடாத்தும் ” சிறீலங்கா – யேர்மன் வணிக மன்றத்துக்கு வருகை தர இருக்கும் சிறீலங்கா அரசஅதிபர் தமிழினப்படுகொலையாளி மைத்திரிபால சிறீசேனவை கண்டித்து ஆர்ப்பாடம் எதிர்வரும் 18.02.2016 காலை 11 மணிக்கு பேர்லின் நகரில் நடைபெறவுள்ளது.
ஜேர்மனிக்கான பயணத்தை நிறைவு செய்யும் சிறிசேன அங்கிருந்து,எதிர்வரும் 19 ஆம் திகதி ஒஸ்றியாவிற்கு பயணமாகவுள்ளார்.