உரும்பிராயில் இருவேறு சம்பவங்களில் 50 பவுண் நகை திருட்டு!

0
203
oldgoldஉரும்பிராய் பகுதியில் அடுத்தடுத்து இடம்பெறுகின்ற அதிகரித்த திருட்டுச்சம்பவங்களினால்  அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
இரண்டு கிழமைகளுக்குள் இடம் பெற்ற இருவேறு திருட்டுச் சம்பவங்களில் மட்டும் சுமார் 50 பவுண் நகை, மற்றும் ஒரு தொகை பணம் என்பன பறிகொடுக்கப் பட்டுள்ளது.
உரும்பிராய் தெற்கு ஐயப்பன் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில்  நேற்று முன்தினம் பகல் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
உரும்பிராய் தெற்கு ஐயப்பன் ஒழுங்கையில் அமைந்துள்ள வீட்டில் பகல் 11 மணியளவில் வீட்டார் வெளியில் சென்றிருந்த சமயம் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றதனை அவதானித்த திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த 30 பவுண் நகைகள் மற்றும் நான்கரை இலட்சம் பணம் என்பவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வெளியில் சென்ற வீட்டார் வீட்டிற்கு வந்தபோதே திருட்டைப்பற்றி அறிந்துள்ளனர். உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணையை மேற் கொண்டதுடன் மேலதிக விசாரணையையும் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை உரும்பிராய் தெற்கு கோப்பாய் வீதியில் உள்ள வீடொன்றிலும்  கடந்த 03-ம் திகதி இரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உரும்பிராய் தெற்கு கோப்பாய் வீதியில் அமைந்துள்ள வீட்டின் புகை போக்கி வழியாக உள்நுழைந்த திருடர்கள் நகை கள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த வீட்டில் வயோதிபத் தாயாரும் அவருடைய மகளும் தனித்திருந்த வேளை இரவு ஒரு மணியளவில் வீட்டின் புகைபோக்கி வழியாக திர டர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
வயோதிபத் தாயார் ஒரு அறையிலும் அவருடைய மகள் மற்றொரு அறையிலும் உறக்கத்தில் இருந்ததை அவதானித்து திருடர்கள் மகளை அடித்து கயிற்றினால் கட்டிய போது அவர் அவலக் குரல் எழுப்பியுள்ளார். அப்போது திருடர்கள் அவருடைய வாயினுள் துணியை திணித்து வாயை அடைத்துள்ளனர்.
எனினும் மகளின் அவலக்குரல் கேட்டு எழுந்த அந்த தாயார் மின் விளக்கை போட்டுள்ளார், அப்போது அந்த வயோதிப மாதுவையும் தாக்கி  அவரையும் கயிற்றினால் கட்டி வைத்து விட்டு வீட்டை சல்லடை போட்டுத் தேடி அங்கிருந்த சுமார் 20 பவுண் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை அத்திருடர்கள் கொள்ளையடித்து  தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலி ஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தடயங்களை பதிவு செய்து விசாரணையை  மேற்கொண்டதுடன்  மேலதிக விசாரணை யையும் ஆரம்பித்துள்ளனர்.
அண்மைக்காலமாக உரும் பிராயில் அடுத்தடுத்து இடம்பெறும் திருட்டுக்களால் மக்கள் இரவுப் பொழுதை அச்சத்துடனேயே கழித்து வருகின்றனர். இதனால் இரவுவேளைகளில் பொலிஸார் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here