
இதற்கான சுபநேரத்தை அவரது ஆஸ்தான சோதிடர் சுமணதாச உள்ளிட்டோர் குறித்துக் கொடுத்திருந்தனர்.
எனினும் சோதிடர்கள் குறித்துக் கொடுத்த சுபநேரத்திற்கு உகந்த திசையானது அலுவலக நுழைவாயிலின் எதிர்த்திசையில் அமைந்திருந்தது.
இதன் காரணமாக மகிந்த ராஜபக்க்ஷ தனது அலுவலக நுழைவாயிலின் அருகில் வந்து எதிர்ப்புறமாக திரும்பி நின்று கொண்டு பின்புறமாக கைகளை நீட்டி நாடாவை வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.
சோதிட ரீதியான தோஷங்கள் காரண மாகவே தனது பதவி பறிபோனதாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்க்ஷ, அதனை நிவர்த்தி செய்து பழைய அதிகாரத்தை எட்டிப்பிடித்துக் கொள்ளசோதிடத்தை நம்பி படும்பாடு காண்பவர்களுக்கு பெரும் சுவாரஸ்ய மூட்டுவதாகவே அமைந் துள்ளது.