வட கொரியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு முகம் சுழிக்க வைக்கும் புதிய கட்டுப்பாடுகள்!

0
251

North-Korea-வட கொரியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டினர்கள் பொது இடங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு சர்வாதிகாரியான கிம் யோங்–அன் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட கொரியா நாட்டிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர்களுக்காக புதிதாக மையம் ஒன்றை 7 மில்லியன் பவுண்ட் செலவில் கிம் யோங்-அன் அண்மையில் திறந்து வைத்துள்ளார்.

வட கொரியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரும், இந்த மையத்தில் 83 பவுண்ட் கட்டணம் செலுத்தி, எந்தெந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என பதிவு செய்துக்கொள்ளலாம்.

ஆனால், சுற்றுலா செல்லும் பகுதிகளில் வெளிநாட்டினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகள் தான் பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள்:

• பொது இடங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது. எச்சில் துப்பக்கூடாது.

• கிம் யோங்-அன்னின் ஆட்சியை பற்றி பொது இடங்களில் அவதூராக பேசக்கூடாது.

• உள்ளூர் மக்களின் அனுமதி இல்லாமல், அவர்களின் வீட்டிற்குள் நுழையக்கூடாது.

• வடகொரியா நாட்டில் உள்ள ஏழை மக்களை புகைப்படம் எடுக்க கூடாது. அதேசமயம், அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்துக்கொள்ள வேண்டும்.

• வெளி உலகம் பற்றிய செய்திகள் அடங்கிய செய்திதாள்களை வடகொரியா நாட்டிற்குள் கொண்டு வரக்கூடாது.

• மடிக்கணிணி, மெமரி கார்டுகள், கைப்பேசிகள், பைனாக்குளர் கொண்டு வரக்கூடாது.

• மது அருந்துவிட்டு பொது இடங்களில் நடமாடக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வடகொரியா நாடு தற்போது கடுமையான நிதிப்பற்றாக்குறையில் இருப்பதால், சுற்றுலா மூலம் வருமானத்தை பெருக்க இந்த புதிய சுற்றுலா மையத்தை திறந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், சுற்றுலா பயணிகளுக்கு, குறிப்பாக சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளுகு விதித்துள்ள சில கட்டுப்பாடுகள் மிகக்கடுமையாக உள்ளதாக வெளிநாட்டினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here