முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரது இதுவரையான வருமானம் ரூபாய் 20 மில்லிய னாக மட்டுமேயுள்ள நிலையில், மகிந்தவின் புதல்வர் யோ´த ராஜபக்சவினால் சி.எஸ்.என் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான பணம் ரூபாய் 340 மில்லியன் எப்படி பெறப்பட்டது என்ற கோணத்தில் நிதி மோசடி விசாரணைப்பிரிவு தனது விசாரணைகளை முன்நகர்த்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர் பிலான நிதி மோசடி விசாரணைப் பிரிவு குறித்து ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணா திலக கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து கூறுகையில்,
எப்.சி.ஐ.டி என்பது வழக்கு விசாரிக்கும் இடமல்ல. ஆனால், அப்படியான சந்தர்ப்பங்களும் இருந்தன. 1971 ஆம் ஆண்டு புரட்சி உங்களுக்கு நினைவிருக்கலாம்.
புரட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் குற்ற நியாய நீதி ஆணைக்குழுவை நியமித்தது.
தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை தொடங்க 25 வயதான இளைஞனுக்கு எப் படி இந்தளவு பணம் கிடைத்தது என சிவில் சமுகம் கேட்கிறது. தற்போது விசாரணை நட த்தும் போது மேலோகத்தில் இருக்கும் தேங் காய் தெரிய ஆரம்பித்ததுடன் சீனிகம ஆலய த்திற்கு சென்று தேங்காய் உடைக்கின்றனர்.
தேங்காய் உடைக்க தேவையில்லை. பணம் எப்படி கிடைத்தது என்று கூறினால் போதும். அப்போது நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும். ஆலயத்திற்கு செல்வதால், ஊழலை மறைக்க முடியாது.
சீனிகம என்பது நான் பிரதிநிதித்துவப் படுத்தும் மாவட்டத்தில் உள்ளது. திருடி உடைக்கும் தேங்காயால் பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு கதையும் நம்பிக்கையும் உள்ளது.
சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியை ஆரம்பிக்க யோஷித ராஜபக்ஷவுக்கு 340 மில்லியன் ரூபாய் எப்படி கிடைத்தது என்பது குறித்தே நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் தங்காலை பீச் ஹோட்டலை கொள்வனவு செய்ய பணமாக 157 மில்லியன் ரூபாய் கிடைத்திருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது எனவும் கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷ_ மாரசிங்க,
மகிந்த ராஜபக்ஷவின் குடும்ப வருமா னம் எவ்வளவு என்று தேடிப்பார்த்தோம். மகிந்த 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
1970ஆம் ஆண்டு 5ஆம் மாதம்- 1972 ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 22ஆம் திகதி வரை 23 மாதங்களுக்கு மாதம் 600 ரூபாய் வீதம் 13 ஆயிரத்து 800 ரூபாவை சம்பளமாக பெற்றுள்ளார்.
1972ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற த்தில் அவர் 52 மாதங்கள் பதவி வகித்துள் ளார். மாதம் ஆயிரம் ரூபா என்ற கணக்கில் 52 ஆயிரம் ரூபாவை சம்பளமாக பெற்றுள் ளார். இதனடிப்படையில் இரண்டாது நாடாளு மன்றத்தில் பதவி வகித்தமைக்காக 8 லட்ச த்து 6 ஆயிரத்து 550 ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளார்.
மூன்றாவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தமைக்காக 13 லட்சத்து 35 ஆயிரத்து 575 ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.
நான்காவது நாடாளுமன்றத்தில் 12 மாதங்கள் அங்கம் வகித்தமைக்காக 4 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். 5ஆவது நாடாளுமன்றத்தில் 9 லட்சத்து 38 ஆயிரத்து 600 ரூபாயை சம்பள மாக பெற்றுள்ளார். 6ஆவது நாடாளுமன்ற த்தில் பதவி வகித்தமைக்காக 6 லட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாவை பெற்றுள்ளார்.
2005ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்த மைக்காக அவருக்கு 92 லட்சத்து 25 ஆயிரம் ரூபா சம்பளமாக கிடைத்திருக்கும். 1970 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை யில் மகிந்த ராஜபக்ஷவின் மொத்த வருமா னம் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்.
நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பி னராக கடந்த 61 மாதங்களில் 41 லட்சத்து 4 ஆயிரத்து 385 ரூபாயை சம்பளமாக பெற்று ள்ளார்.
யோஷித ராஜபக்ஷ 2006 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்டதுடன் கடற்படை லெப்டினட் என்ற வகையில் அவருக்கு மாதம் 28 ஆயிரத்து 435 ரூபா சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனை சேர்த்தால் 31 லட்சத்து 84 ஆயிரத்து 720 ரூபாயை மொத்த சம்பளமாக பெற்றுள்ளார்.
இவ்வாறு கணக்கிடும் போது ராஜபக்ஷ குடும்பத்தினரின் அதிகாரபூர்வமான முழுமையான வருமானம் இண்டு கோடியே 8 லட்சத்து 9 ஆயிரத்து 630 ரூபாய். இப்படியான நிலையில் யோஷித ராஜபக்ஷ சீ.எஸ்.என். தொலைக்காட்சியை ஆரம்பிக்க ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எப்படி 340 மில்லியன் ரூபாய் கிடைத்தது?, இது சம்பந்தமாகவே தற்போது நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என ஆஷ_மாரசிங்க தெரிவித்துள்ளார்.