
இக் கலந்துரையாடலில் கண்ணி வெடி அகற்றல், வீட்டுத்திட்டம், மக்களிற்கான வாழ்வாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதேவேளை சந்திப்பிற்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் பளை முகமாலைப் பகுதியில் மிதிவெடி அகற்றப்பட வேண்டிய பகுதியினையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.