சபாநாயகருக்கு கொலை அச்சுறுத்தல்!

0
129

thumb_large_speaker-karu-jayasuriya-new2ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததை தொடர்ந்து நேற்று இரவு தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு, தொலைபேசி ஊடாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு இடமளிக்க வேண்டும் என, மிரட்டல் விடுத்ததாக, கரு ஜெயசூரிய  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும் தான் அதனை பொருட்படுத்தப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தம்மை பாராளுமன்றத்தில் சுதந்திரமான அணியாக செயற்பட அனுமதிக்குமாறு கோரி, நேற்று பாராளுமன்றத்தினுள் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here