யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையாளர் செயிட் அல் øசைனுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் ஆணையாளருக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
ஆணையாளர் சென்ற வீதிகள் இரு மருங்கிலும் ஐம்பது மீற்றர் இடைவெளியில் பொலிஸார் நிறுத் தப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த பாதுகாப்பு நாட்டின் ஜனாதிபதிக்கு வழங்கும் பாதுகாப்பு போன்றே காணப்பட்டது. எனினும் பாதுகாப்பு கெடுபிடிகள் எவையும் இருக்கவில்லை.
ஊடகவியலாளர்கள் முதற் கொண்டு சாதாரண மக்கள் வரை அவரை சாதாரணமாக அணுக முடிந்தது. இதனால் மக்கள் தமது பிரச்சினைகளை ஆணையாளரி டம் துணிவுடன் கூறியிருந்தார்கள்.
சுன்னாகம் நலன்புரி முகாம் சென்ற போது கே.கே.எஸ்.வீதியின் இரு மருங்கிலும் பொலிஸார் நிறுத் தப்பட்டிருந்தனர்.
இதனைவிட விசேட அதிரடிப் படையின் மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளும் நேற் றையதினம் இடம்பெற்றன.
ஆணையாளர் தனது சந்திப்புக் களை நேற்று பிற்பகலுக்கிடையில் முடித்து கொண்டு நேற்று மாலையே உலங்கு வானூர்தி மூலம் திருகோண மலை பயணமானார்.