அரசாங்கத்தின் ஒருசில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் சீனிகம ஆலயத்தில் இன்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்த பிரார்த்தனைக்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடைபவனியாக ஆலயத்தை சென்றடைந்தனர்.
இதன்போது அவர்கள் தேங்காய் உடைக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதேவேளை, இந்தப் பிரார்த்தனையை ஏற்பாடு செய்த தரப்பினருக்கு எதிராக சிலர் நடை பயணம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இலங்கை தேசாபிமானி தேசிய முன்னணி இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இவர்கள் அம்பலாங்கொடையில் இருந்து சீனிகமவிற்கு நடைபயணமாகச் செல்ல முயற்சித்த போதிலும், பொலிஸார் அதனைத் தடுத்தனர்.
இறுதியில் அவர்கள் அம்பலாங்கொடை சாந்தி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு தொடர்ந்தும் இயங்க வேண்டும் என இவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தேங்காயின் விலை குறைவடைந்துள்ளது. தேங்காய் உடைப்தென்றால் ஒன்று அல்லது இரண்டு உடைக்க வேண்டாம். ஆகக்குறைந்தது நாடு பூராகவும் 10 இலட்சம் தேங்காய்களை உடையுங்கள். அதன்போது தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படும். பின்னர் தேங்காய் விலை அதிகரிக்கும். தேங்காய் விலை அதிகரித்தால் வட மேல் மாகாண மக்களுக்கு சிறந்தது.
எதிர்க்கட்சியினர் இன்று தேங்காய் உடைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குருநாகலில் கருத்துத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது,
இவ்வாறு 10 அல்லது 15 தேங்காய்கள் உடைக்க வேண்டாம். அத்துடன், அரசாங்கத்தின் தோட்டங்களில் இருந்து தேங்காய்களைத் திருடவும் வேண்டாம். தேங்காய் உடையுங்கள் எமக்குப் பிரச்சினை இல்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக அவ்வாறு செய்யுங்கள். எனினும், 10 இலட்சம் தேங்காய்களை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டும். இவ்வளவு திருடியவர்கள் தேங்காய்களைத் திருடுவது பெரிய விடயமல்ல என ரணில் தெரிவித்தார்.