மாற்றுத்திறனாளி வேடமிட்ட சக்கர நாற்காலியில் வெடிகுண்டு: விமான விபத்திற்கான மர்மம் விலகியது!

0
137

04-1454579276-palne-blastசோமாலிய விமானத்தில் தீவிரவாதி ஒருவன் மாற்றுத்திறனாளி வேடமிட்டு சக்கர நாற்காலியில் வெடிகுண்டை மறைத்து வந்து விமானத்தை வெடித்து விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சோமாலிய நாட்டை சேர்ந்த Daallo Airlines என்ற விமானம் கடந்த செவ்வாய்கிழமை அன்று 74 பயணிகளுடன் புறப்பட்டபோது நடுவானில் வெடிவிபத்து ஏற்பட்டு விமானத்தில் பெரும் துளை ஏற்பட்டது.

இதில், விமானத்தில் பயணித்த பயணி ஒருவரும் அந்த துளை வழியாக வெளியே வீசப்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சோமாலியா நாட்டை சேர்ந்த தீவிரவாதியான Abdullahi Abdisalam Borleh(55) என்பவன் மாற்றுத்திறனாளி வேடமிட்டு சக்கர நாற்காலியில் பயணம் செய்துள்ளான்.

விமானம் நடுவானில் பறந்தபோது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க வைத்துள்ளான்.

அப்போது, ஜன்னல் ஓரமாக அவன் அமர்ந்திருந்ததால், வெடிகுண்டு வெடித்த வேகத்தில் விமானத்தின் துளை ஏற்பட்டு அந்த துளை வழியாக தீவிரவாதி வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளதாக தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சோமாலியாவில் இயங்கி வரும் Al-Shabaab என்ற தீவிரவாத இயக்கம் தான் இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்க வாய்ப்புள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here