தொழுகையில் கலந்து கொள்ளத் தவறிய 14 வயது சிறுவன் ஒருவனுக்கு அவனது பெற்றோர் முன்னிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த மரணதண்டனை குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
வட சிரியாவிலுள்ள ஜராபுலஸ் நகரைச் சேர்ந்த மேற்படி சிறுவன் அந்நகரிலுள்ள மத்திய பள்ளிவாசலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தொழுகையில் கலந்து கொள்ளத் தவறியதையடுத்து கைது செய்யப்பட்டான்.
அவன் மீது மத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை மற்றும் மதத்தைக் கைவிட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இதனையடுத்து அந்த சிறுவனுக்கு அவன் தாய் மற்றும் தந்தை உள்ளடங்கலான பெருந்தொகையான மக்கள் முன்னிலையில் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.