காணாமற் போனவர்களை ஜனாதிபதியும் பிரதமரும் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்: பா.அரி­ய­நேத்­திரன்

0
118

p.ariyanenthiranஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உட­ன­டி­யாக கவனம் செலுத்தி காணாமற் போன­வர்­களை கண்­டு­பி­டித்து கொடுக்க வேண்டும். அல்­லது அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்க வேண்டும். என முன்னாள் பார­ாளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேத்­திரன்  தெரி­வித்தார்.

காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்கள் வியா­ழக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு காந்தி சதுக்­கத்தில் நடத்­திய கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அர­சாங்கம் சுதந்­தி­ர­மாக சுதந்­திர தினம் கொண்­டாடும் நிலையில் தமிழ்­மக்கள் கண்­ணீ­ரும் கம்­ப­லையும் வாழ்நாள் பூரா­கவும் அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். உண்­மை­யாக இவர்­க­ளுக்கு தமி­ழர்கள் மீது நம்­பிக்கை, விசு­வாசம், இருந்தால் காணாமற் போன­வர்­களின் விட­யத்தில் தீர்வு கொடுத்­தி­ருக்க வேண்டும். வட­கி­ழக்கில் காணாமற் போன­வர்­களின் குடும்­பத்­திற்கு பதில் சொல்­லி­யா­க­வேண்டும்.

தமிழ்­மக்­களை சுட்டு குவித்து வெற்றி விழா கொண்­டா­டிய மஹிந்த ராஜ­பக்ஸ கண்ணீர் வடிக்­கின்றார். இது நாங்கள் வழி­படும் இறை­வனின் இறை­தீர்ப்பு ஆகும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 14 பிர­தேச செய­ல­கங்­க­ளிலும் இருந்து 2200பேர் கூலிப்­ப­டை­க­ளி­னாலும், கடந்த ஆட்­சி­யா­ளர்­க­ளி­னாலும் கா­ணாமல் போயுள்­ளார்கள். இவர்கள் கடத்­தப்­பட்­டார்­களா?, காணாமற் செய்­யப்­பட்­டார்­களா? என சந்­தேகம் கொள்ள வேண்­டி­யுள்­ளது. காணாமற் போன வர்களை கண்டறியும் ஆணைக்­குழு நல்­லாட்சி அர­சாங்­கத்தில் காணாமற் போன குடும்­பத்­திற்கு என்ன செய்­தி­ருக்­கின்­றது. அவர்­களின் குடும்­பத்­திற்கு வாழ்­வா­தா­ரத்தை வழங்­கி­யி­ருக்­கின்­றதா. இல்லை என்று தான் அனு­மானம் செய்­ய­மு­டியும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் காணா­மற்­போ­ன­வர்­களின் குடும்­பத்­தார்கள் ஒன்று சேர்ந்து சுமார் 2200 விண்­ணப்­பங்­களை  ஆணைக்­கு­ழு­விற்கு விசா­ரணை செய்­வ­தற்கு விண்­ணப்­பித்­தி­ருந்­தது. இதில் 425 விண்­ணப்­பங்­களை விசா­ரணை செய்­தது. 1575விண்­ணப்­பங்கள் விசா­ரணை செய்­யப்­ப­ட­வில்லை.விசா­ரணை செய்­வ­தற்கு விண்­ணப்­பி­த்திருந்தவர்­களின் விண்­ணப்­பங்கள் எங்கே?

விசா­ரணை விண்­ணப்­பங்கள் வாக்­குச்­சீட்­டுப்போல் குப்­பைக்குள் வீசப்­பட்­டுள்­ளதா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது.ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர்களுக்கு மிகவிரைவில் காணாமற் போனவர் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நீதியான, தீர்வுகள் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here