யுத்தம்செய்ய அழைத்தபோது ஓடி ஒழிந்தவர்கள் இன்று நாட்டையும் இராணுவத்தையும் காட்டிகொடுக்க சர்வதேசம் அழைப்புவிடுத்தவுடன் முன்வந்து நிற்கின்றனர். இலங்கையை கறைபடிந்த நாடாக மாற்றி சர்வதேசதின் முழுமையான விசாரணையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளின் வருகையின் பின்னணி மிகவும் மோசமானது. நாட்டை துண்டாட திட்டம் தீட்டப்படுகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று இலங்கை வரும் நிலையில் அது தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.