சிறிலங்காவின் 68 ஆவது சுதந்திரதினத்தில் தங்களது எதிர்ப்பையும், துக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கறுப்பு பட்டி அணிந்து உண்ணாவிரதம் இருந்துள்ளனர்.
இன்று (04) காலை, காணாமல் போனோரின் குடும்பங்களின் உறவினர்கள் ஒன்றுசேர்ந்து கறுப்பு பட்டி அணிந்து அடையாள உண்ணாவிரத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
நாட்டுக்கு சுந்திரம் எமக்கோ கண்ணீர் இனியும் வேண்டாம் இந்த துயரம்,காணமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளின் உண்மை நிலை குறித்து அரசே எமக்கு பதில் சொல், ஜனாதிபதி ஆணைக்குழு எமக்கு வேண்டாம் சர்வதேச விசாரணையே வேண்டும், தைத்திருநாளில் கொல்லப்பட்ட செய்தி சொல்லவா யாழ்ப்பாணம் வந்தீர்கள், எம் கண்ணீருக்கு இது பதில் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள், கல் நெஞ்சை கரைத்து கனிவுடன் பதில் தா, கண்ணீருடன் காத்திருக்கின்றோம் காலங்களை இனியும் கரைத்து காத்திருக்க வைக்காதே, நல்லாட்சி அரசே எம் உறவுகளை விரைவில் விடுதலை செய்,நாம் இறப்பதற்கு முன் எம் பிள்ளைகளை விடுதலை செய் உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனும் கலந்துகொண்டார்.