ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் மாணவ,மாணவிகளையும் கடத்தி சென்று வருகின்றனர். கடந்த வாரம் மலாரி கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கு இருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
பின்னர் அங்கு இருந்த 40 மாணவர்களை கடத்தி சென்றனர்.
கடந்த வாரம் மட்டும் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் மகள்களை போகோஹராம் தீவிர வாதிகள் கடத்தி சென்று உள்ள தாகவும் அவர்களை மீட்டு தருமாறு ஐக்கிய நாடு சபையில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த 40 மாணவர்களை கடத்தி சென்றனர் . மாணவர்களுக்கு 15 முதல் – 23 வயதுக்குள் இருக்கும் என நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர்.
இதுபோல் கடந்த ஏப்ரல் மாதம் சிபோக் கிராமத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளை கடத்தி சென்றனர்.
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை போகோ ஹாரம் தீவிரவாதிகள் கேமரூனில், வாசா பகுதியில் பேருந்து மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பலியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.