ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இன்று கைச்சாத்திட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து எதிர்வரும் காலங்களில் செயற்படுவது தொடர்பிலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இடப்படும் நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.