
குறித்த கைது நட வடிக்கை நேற்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ் வாறு கைது செய்யப் பட்டவர் வலிகாமத் தில் உள்ள வெதுப்பக உரிமையாளரின் மனைவி என தெரிய வருகின்றது. இவ ரிடமே மேற்படி தங் கம் மற்றும் வெளி நாட்டு நோட்டுக்கள் என்பன யாழ்.பொலி ஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம்- மாதகல் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பக உரிமையாளர் ஒருவரின் மனைவி சாவகச்சேரி- சங்கத்தானை பகுதி யில் வான் ஒன்றில் தங்கம் கடத்தப்படுவது தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறை பொலி ஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன் றையடுத்து நடத்தப்பட்ட சோதனையின் போதே மேற்படி தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி தங்கம் சாவகச்சேரி, சங்கத் தானை பகுதியிலிருந்து மாதகல் கொண்டு செல்லப்பட்டு மாதகல் பகுதியிலிருந்து கடல் வழியாக இந்தியா கொண்டு செல்ல திட்ட மிடப்பட்டிருந்தமை முதற்கட்ட விசாரணை கள் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தில் 100 கிராம் அளவிலான 70 தங்க கட்டிகள், 7 அமெரிக் கன் டொலர்கள், 100 கனேடியன் டொலர் கள், 1000 இந்தியன் ரூபாய்கள், 84 ஆயிரம் இலங்கை பணம் ஆகியன இருந்ததாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். சம்பவ ம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற பொலிசார் இதன் பின்னணியில் பலர் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துடன் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடி க்கையிலும் இறங்கியுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட பெண் நேற்று யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்கரன் முன்நிலையில் பொலிஸா ரால் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது குறித்த பெண்ணை நாளை மறுதினம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட் டுள்ளார்.