
சம்பவம் தொடர்பில்,
கிணற்றடிக்கு சென்ற குறித்த இளைஞன் நீண்ட நேரமாகியும் வராததினால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேடிய போது கிணற்றினுள் இருந்து மீட்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இருப்பினும் குறித்த இளைஞனை கிணற்றில் இருந்து மீட்கும் போது இறந்த நிலையிலையே மீட்கப்பட்டதாக தெரிய வருகிறது.
வெலிக்கண்டல் கண்டாவளையை சேர்ந்த 26 வயதான சின்னத்துரை கோகுலன் என்னும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.