சம்பூர் சிறுவனின் மரணம் : 15 வயது சிறுவன் கைது!

0
177



Photo__2_திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் (வயது 6) கடந்த வாரம் கிணற்றிலிருந்து சடலமாக  மீட்கப்பட்டிருந்தான்.

தனது சகோதரனுடனும் தற்போது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சிறுவனுடனும் இந்தச் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.Tharshan_Kugathasan_6-year-old[1]

இதன் பின்னர், சகோதரனும் கைதுசெய்யப்பட்ட சிறுவனும் வீடு திரும்பியுள்ளனர்.

ஆனால், வீடு திரும்பாத குகதாஸ் தர்சனை அவனது தாய் தேடியதுடன், இது தொடர்பில் சம்பூர் பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைதொடர்ந்து, பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து சிறுவனை தேடியபோது,   சிறுவனின் வயிற்றில் பெரிய கல் ஒன்று கட்டப்பட்டிருந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுTharshan_Kugathasan_03[1]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here