யாழ்.கட்டப்பிராயில் வசமாக மாட்டிய கொள்ளையர்கள்!

0
265
8859யாழ்.கட்டப்பிராய் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை யிட முயன்றவர்கள், வீட்டின் உரி மையாளரின் துணிச்சலினால் வசமாக மாட்டிய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
யாழ்.கல்வியங்காடு – கட்டப் பிராய் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வீட்டின் உரிமையாளர்கள் இல்லாத நிலையில் உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த அலுமாரிகள், மேசைலாச்சிகளை உடைத்து தேடுதல் நடத்தி சுமார் 55ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளரான பெண் வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளதை அவதானித்துள்ளார்.
உடனடியாக குறித்த பெண் கூச்சலிட்ட நிலையில் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து குறித்த பெண் தனது கைத்தொலைபேசியில் கொள்ளையர்களை புகைப்படம் எடுத்துள்ளதுடன் கொள்ளை யர்களில் ஒருவரின் கைப்பையையும் பறித்துள்ளார்.
கூக்குரல் கேட்டு அயலவர்கள் ஒன்றுகூடிய நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து கொள்ளை யர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டு அப்பகுதி இளைஞர்களால் பிடித்து வரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை இக் கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து வீட்டின் கிணற்றடியில் மதுபானமும் அருந்தி யுள்ளனர்.
இந்நிலையில் குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தடயங்களை பதிவு செய்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here