நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி சர்வமதத் தலைவர்கள் நாளை ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகையை நோக்கி பாதயாத்திரையொன்றை நடத்தவுள்ளனர்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்தப் பாதயாத்திரை குறித்து மேலும் தெரியவருவதாவது,
நாளைக் காலை 9 மணியளவில் மகசின் சிறைச்சாலை முன்றலில் ஒன்றுகூடும் சர்வ மதத்தலைவர்கள் அங்குள்ள சிறைக்கைதிகளை நேரில் சந்திக்கவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகளடங்கிய மகஜருடன் ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை நோக்கிய பாத யாத்திரையை ஆரம்பிக்கவுள்ளனர்.
பாதயாத்திரை பேஸ்லைன் வீதியூடாக சென்று பொரளை யை அடைந்து அங்கிருந்து வோட்பிளேஸ் ஊடாக லிப்டன் சுற்றுவட்டத்தை அடையவுள்ளது. பின்னர் அங்கிருந்து அலரிமாளிகை நோக்கிச் சென்று அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகம் நோக்கிச் செல்லவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரி டம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலி யுறுத்தி மகஜர்கள் கையளிக் கப்படவு ள்ளன.