மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம்!

0
192

atul-keshab-galle1இலங்கைக் கடற்படையினரால் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் பல இலட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளதால் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர் போராட்டங்களை கைவிட்டு நேற்று சனிக்கிழமை காலை இராமேஸ்வரம், மண்டபம் துறைமுகத்திலிருந்து ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்ட விசைபடகளில் மீன்பிடி அனுமதி பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில், கச்சத்தீவு அருகே ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினர் இந்த வழியாக வந்த படகுகளை தடுத்து நிறுத்தியதுடன், துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

அத்துடன் 100 இற்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி கருவிகளை சேதப்படுத்தி கடலில் எறிந்ததோடு, படகையும் தம்மையும் கைது செய்வோம் என மிரட்டியதால் அச்சமடைந்த தாம் கரை திரும்பியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இன்று அதிகாலை யாழ்ப்பாணம் ஆணையிறவு தீவுப்பகுதியில் எல்லைதாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 9 மீனவர்கள் மற்றும் 2 படகுகள் இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here