மாஸ்கோ – கிழக்கு ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7 ஆக பதிவானது. பசிபிக் பெருங்கடல் அருகே நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியையொட்டி அமைந்துள்ள கிழக்கு ரஷ்யாவில் நேற்று அதிகாலை 3.25 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 7.0 ஆக பதிவானது.
ரஷ்யாவின் வடகிழக்கு நகரான யேலிஸோவா பகுதியில் பூமிக்கடியில் 95 மைல் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால், சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று தேசிய மற்றும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.