வடகிழக்கில் மகிந்தவைப் புறக்கணிக்கக்கோரும் சுவரொட்டிகள்!

0
758

mahin-wrongஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை புறக்கணிக்கக் கோரும் சுவரொட்டிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் வீதி ஓரங்களிலும், ஆலய சுவர்களிலும், வர்த்தக நிலையங்களிலும் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக சில இடங்களில் மகிந்த ராஜபக்ஷவின் பிரச்சார சுவரொட்டிகளின் மீதே அவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here