சென்னை கொளத்தூரில் 7 -ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி!

0
232

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 29ந் தேதி சென்னை சாஸ்திரி பவன் எதிரே கொளத்தூரை சேர்ந்த முத்துக்குமார் தீக்குளித்து மரணம் அடைந்தார். அவரது 7 -ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று (வெள்ளிக்கிழமை) கொளத்தூரில் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி சென்னை கொளத்தூரில் அவரது வீட்டின் அருகே படத்துடன் நினைவு தூண் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் டைரக்டர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் வீரசந்தானம், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி, அம்பேத் வளவன், அன்பு செழியன், வணிகர் சங்க பேரமைப்பு வட சென்னை தலைவர் கொளத்தூர் ரவி, துணைத்தலைவர் ஜெயராமன், பொன்சேகர் ரமேஷ் மற்றும் தமிழ் அமைப்பினர்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
muthukumar (3) - Copy

muthukumar (2) copy - Copy

muthukumar (2) copy 2 - Copy - Copy

muthukumar (2) - Copy - Copy
kolathoor 3 - Copy

kolathoor 1 - Copy

kolathoor 2 - Copy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here