காத்தான்குடியில் தேர்தல் வன்முறை: பெற்றோல் குண்டு தாக்குதல், கட்அவுட்கள் தீக்கிரை!

0
152

_kathankudy_batticaloaமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளின்போது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் இரண்டு பிரசார அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவின் தேர்தல் பிரசார அலுவலகம் மீது தாக்குதல் நடத் திய நபர்களால் கட் அவுட்களும் அலுவலக தளபாடங்களும் உடைமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
பாலமுனையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய நபர்களினால் ஜனாதிபதி யின் தேர்தல் பிரசார கட் அவுட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறைகள் தவிர, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மொகமட் பாறுக் சிப்லி உள்ளிட்ட மைத்திரிபால சிறிசேனவின் செயற் பாட்டாளர்கள் நான்கு பேரின் வீடு கள் மீதும் பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நேற்று அதிகாலை தமது தேர்தல் பிரசார அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய குழுவினர், அலுவலக தளபாடங்களையும் உடைமைகளையும் அடித்து நொறுக்கியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மொகமட் பாறுக் சிப்லி கூறுகின்றார்.
இந்தத் தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் தனது வீட்டின் மீதும் தமது தேர்தல் செயற் பாட்டாளர்கள் மூவரது வீடுகள் உள்ளிட்ட நான்கு வீடுகள் மீதும் பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தனக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் தனது வீட்டின் மீதான பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள போதிலும், சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸ் தரப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here