வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் உயிர் நீத்த நுங்கம்பாக்கம் சாசுத்திரி பவன் நுழைவாயிலில் தமிழர் எழுச்சி இயக்கத்தினர் 7 -ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் முகமூடி அணிந்து ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தியதோடு ஆங்கிலேயரின் அடிமை சின்னமான ஹாடோஸ் சாலை பெயரை மாற்றித் தமிழினத்தின் அடையாளமான முத்துக்குமாரின் பெயரைச் சூட்டுக என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
தடையை மீறி ஊர்வலமாகச் சென்ற தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்திற்கு தமிழர் எழுச்சி இயக்க சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் கண்ணன் தலைமையேற்று நடத்திட, காஞ்சி மாவட்டச் செயலர் குமரவேல், இணையச் செயலர் மதியரசு, தமிழகப் பெண்கள் செயற்களத் தோழர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.