இச் சம்பவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் கைதடி வடக்கு கடலில் இடம் பெற்றது. கைதடி வடக்கைச் சேர்ந்த செல்லையா கனகநாதன் (வயது -52) என்ற 5 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தெடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மேற்படி நபர் தனது வளர்ப்பு நாயை வாரத்தில் ஒரு தடவை கடலில் குளிக்க வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதற்காகவே நேற்றைய தினம் தனது நாயை குளிக்க வைப்பதற்காக சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. ஆனால் அவரது நாய் மட்டும் வீடு நோக்கிச் சென்றுள்ளது. இதனால் சந்தேகம் கொண்ட வீட்டார் கடற்பரப்புக்கு சென்றுள்ளனர்.
இதேவேளை மேற்படி குடும்பஸ்தரின் சடலம் கடற்கரையில் ஒதுங்கியிருந்தது. இதனையடுத்து இது தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் பொலிஸார் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதன வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.