போலி கடவுச்சீட்டு தயாரிக்க தொழிற்சாலை வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்: பிரான்ஸ் எச்சரிக்கை!

0
162

8786ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுக்கு தேவையான போலி கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்காக தனி தொழிற்சாலைகளை அமைத்திருப்பதாக பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Bernard Cazeneuve கூறியதாவது, ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் இருந்து திருடிய பத்திரங்கள் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் போலி கடவுச்சீட்டுகளை தயாரிக்க தனி  தொழிற்சாலை அமைத்திருக்கலாம்.

ஐ.எஸ். அமைப்பினர் கடவுச்சீட்டு தயாரிக்கும் இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் குறைந்தது இரண்டு பேராவது போலி சிரிய கடவுச்சீட்டுகளை பயன்படுத்து அகதிகள் போன்று ஐரோப்பாவுக்குள் நுழைந்திருக்கலாம்.

எனவே, சிறப்பு படை ஒன்றை கிரீஸ் நாட்டுக்கு அனுப்பி இந்த போலி கடவுச்சீட்டுக