ஜெய்ப்பூரில் காந்தி சிலையை ஐ.எஸ் அமைப்பினர் அவமதிப்பு செய்தனர். மேலும், காந்தி சிலை மீது வாசகங்களை எழுதி குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் பகுதியில் உள்ள காந்தி சிலையின் பின்புறமும், முன்புறமும் கருப்பு பெயின்டை பூசி அவமானம் படுத்தியுள்ளனர், சிலையின் மீது குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் விதமாக அச்சுறுத்தல் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஐ.எஸ் அமைப்பின் பெயருடன் உள்ள அந்த வாசகங்களை, எழுதியது யார் என்பதை குறித்து அப்பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, புலனய்வு பிரிவு போலீசார், அப்பகுதியில் சந்தேகம் படும் படி இருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜெய்ப்பூர் காவல்துறை தலைவர் டி.சி ஜெயின் கூறியுள்ளார்.