யாழ்ப்பாணம் , நீர்வேலி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்தே உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அதனை அவதானித்த அயலவர்கள் தம்மிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சடலம் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் குறித்த கிணற்றிற்கு அருகில் இருக்கும் வீட்டில் உள்ள 45 வயது ஆண் ஒருவரை கடந்த 15 நாட்களாக காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே குறித்த சடலம் அவருடையதாக இருக்கலாம் என்றும் தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.